Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா! ஒரேநாளில் சடுதியாக உயர்ந்த பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,782 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 25,607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதவேளை உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 25 இலட்சத்து 44 ஆயிரத்து 133 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸால் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments