Home » » ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை பெரும் ஆபத்தாக மாறும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை பெரும் ஆபத்தாக மாறும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமை எமது மக்களிடையே மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 26 ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்ற போதும் எமது நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் உயிர் இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அரசாங்கம் இத்தடைகளை நீக்காமல் பகுதி அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கலாம்.
உடனடியாக கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பது எமது மக்களிடையே தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்விடையத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி எதிர் வரும் காலங்களில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளுவதை முழுமையாக அமுல் படுத்திக் கொள்ளாமல் பகுதி அளவில் தளர்த்திக்கொள்ள வேண்டும்.
தற்போது காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணம் தொடர்ந்துள்ளது.
வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற உத்தியோகஸ்தர் ஒருவரினால் கூட எமது மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தொற்று ஏற்படலாம்.
அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் அமுல்ப்படுத்த வேண்டும்.
எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே அரசாங்கம் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையின் வைத்தியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் கொரோனா தொற்றும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என அறிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் காவல் துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உள் நோக்கம் இருக்கின்றமை தெரிய வருகின்றது.
அரசாங்கத்திற்கு தேர்தலே பிரதான இலக்காக உள்ளதே தவிர மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. தற்போதைய சூழ்நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே இந்த விடையத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |