Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என்பதை கணிக்க முடியாது: விசேட மருத்துவ நிபுணர் தகவல்

தற்போதுள்ள சூழலில் மேலும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை சரியாக கணித்து கூற முடியாது என தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 295 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள அவர்,
“ அண்மைக்காலமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதே இங்கு ஆபத்தான விடயமாகும்.

Post a Comment

0 Comments