Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாத்தறையில் ஒருவருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்

மாத்தறை - அக்குரெஸ்ஸ மலிதுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பிரதேசத்திற்கு செல்லும் கொஹூகொட பஹால மலிதுவ வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தை தனிமைப்படுத்த அக்குரெஸ்ஸ சுகாதார அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியுள்ள 42 வயதான நபரின் மனைவி, மூன்று பிள்ளைகளை பரிசோதனைகளுக்காக மாத்தறை கம்புறுகமுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர குறித்த நபர் பழகிய மற்றும் சென்று வந்த 8 வீடுகளைச் சேர்ந்த நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரயின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிய நபர், கடந்த 24ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நபர் சென்று வந்த இடங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் ஜீ.ஏ. பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments