Home » » ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான விசேட அறிவித்தல்

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான விசேட அறிவித்தல்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து போக்குவரத்துகளை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

இடர் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அதிகாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவினை தளர்த்த அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டது.

இந்த தீர்மானத்தின் பின்னர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பிரிவினருக்கு மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தவும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன் ஒரு பேருந்தில் 25 பேர் மாத்திரமே பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையையும் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையவர்களை பார்வையிடுவதற்கும் குறித்த பேருந்துகளில் பயணிகள் பயணித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்காக செல்பவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னர் பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கும் முறையொன்றினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் இந்த திட்டத்திற்காக காவல் துறையினரின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |