Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா: உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

ஸ்ரீலங்காவில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் இருந்து மகப்பேற்றுக்காக பொரளை காசல் மகப்பேற்று மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கே கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பொரளை காசல் மகப்பேற்று மருத்துவமனை உட்பகுதியில் கிருமிநாசினி வீசும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments