Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பல நாடுகளுக்கு கொரோனா தொற்ற காரணமாக இருந்த மத மாநாடு! விமானத்தில் 8 பேர் கைது

டெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்ற பல மாநிலத்தவருக்கும் கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாநாட்டுக்கு பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர்.
இவ்வாறுவந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மாநாடு பல நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு காரணாக இருந்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் இருந்து மலேசியாவுக்கு மீட்பு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இந்த நிலையில் விமானத்தில் சந்தேகத்துக்குரிய 8 நபர்கள் பயணிக்க தயாராக இருந்தது தெரியவந்தது. இவர்கள் குறித்து பொலிஸூக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 8 பேரும் நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தற்போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments