Home » » கொரோனா தொற்று! அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா தொற்று! அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் வல்லரசு நாடுகளே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன.

உலகளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலி அமெரிக்கா பிரான்ஸ் பிரித்தானியா ஸ்பெயின் போன்ற நாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 65000 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிற்குள்ளாகி கடந்த 11 நாட்களாக சுய தனிமைக்குட்படுத்திக்கொண்ட பிரித்தானிய பிரதமர் இன்று மாலை அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் சற்றேனும் குறையாமல் இருந்தமையாலும் திடீரென உடல் வெப்பநிலை கூடுதலாக இருந்தமையாலும் அவரது மருத்துவர் அவரை உடனே வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியமையை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |