Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெட்ரோல் 46 ரூபாவுக்கு , டீசல் 35 ரூபாவுக்கு வழங்க முடியும் : விலையை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு சஜித் கோரிக்கை


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பெருமளவு குறைவடைந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றால் போன்று இலங்கையில் எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 21 டொலர் வரையில் குறைவடைந்துள்ள நிலையில் இங்கு ஒரு லீற்றர் பெட்ரோலை 46 ரூபாவுக்கும் , ஒரு லீற்றர் டீசலை 35 ரூபாவுக்கும் , ஒரு லீற்றர் மண்ணெண்ணையை 23 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியுமெனவும் இதன்படி அரசாங்கம் விலைகளை குறைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments