Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் தே. பாடசாலையில் 40 மாணவிகள் 9A தரச் சித்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசினால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்து கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அசாதாரண சூழ்நிலையில் நேற்று கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன, மட்டக்களப்பில் சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளில் ஒன்றான மட்/வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலையில்

9 A- 40 மாணவிகள்

8 AB-17 மாணவிகள்

7 A2B-8 மாணவிகள்

6 A3B-12 மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபரான திருமதி தவத்திருமகள் உதயகுமார் அவர்கள் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல பல வகைகளிலும் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments