கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத் தளத்தின் மூலமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இணையத் தளத்தினுடாக இது வரை கிடைக்கப் பெற்ற பெறுபேற்று முடிவுகளின் படி களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் ஜெயமாறன் ஜெயடிதுசா, தவனுதன் லிதுர்சிகா, குணரெட்ணம் றோமியா, மிகித்திரன் வேதான்சனா, குகசோதி அபிஷேக், நித்தியாஸ்வரன் சிரோமியா, அன்பழகன் கிருஸ்மிதா ஆகியோர் ஒன்பது ஏ சித்திகளை(9A) பெற்றுள்ளதுடன் சுகிர்தராஜ் பிருதிகா எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்திகளைப்(8A,B) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
குறிப்பாக மூன்று மாணவர்கள் ஏழு ஏ சித்திகளையும் இரண்டு பி சித்திகளையும்(7A,2B) பெற்றுள்ளதுடன் ஒருவர் ஏழு ஏ சித்திகளையும் ஒரு பி மற்றும் ஒரு சி சித்திகளைப்(7A,B,C) பெற்று சாதனை படைத்துள்ளமை இப் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
பதினொரு வருட பாடசாலைக் கல்வி மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்ள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments: