Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா நோயிலிருந்து மீட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதற்கமைய, இதுவரை 34 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 176 ஆக காணப்படுகின்றது.
அத்துடன் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 33 இலிருந்து 34 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 176 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் வைத்தியசாலைகளில் தற்போது 257 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments