கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருடன் பழகிய 32 பேர் ஜாஎல பகுதியில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டப்படுத்துவதற்காக கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருடன் பழகிய 32 பேர் ஜாஎல பகுதியில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 210 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments