Home » » பலத்த பாதுகாப்புடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்

பலத்த பாதுகாப்புடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (20) மாலை கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்தது
இதனடிப்படையில் இந்த வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதுடன் இதில் இயங்கி வந்த நோயாளர் பிரிவுகள் அனைத்தும் ஹிஸ்புல்லா கலாசார மண்டபம் மற்றும் வேறு அரச கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன.இதற்கு அந்த பிரதேச பொது அமைப்புக்கள் போன்றவை பெரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் மட்டு பல்கலைக்கழக தனிமைப்படுத்தும் நிலையத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த தொற்று நோயாளர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |