Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - Dr.எம் அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் இன்று (3) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர்களும் மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏதாவது அசாதாரணமான உடல் நிலை காணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி Dr.கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்னும்  96 படுக்கைகளை கொன்ட விடுதி ஒன்று மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதர அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக 36 நபர்கள் இது வரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர். ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டு வருகின்றது.

சமூக இடைவெளியினை கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முக கவசம் வெளியில் செல்கின்ற போது கண்டிப்பாக அணிவதும் அவசியமானதாகு.ம் கொரோனா தாக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அதிகமானோர் முககவசங்களையும் சமூக இடைவெளிகளை பேனியதாகவும் கைகளை நன்றாக கழுவுவதையும் கடைப்பிடித்தமை கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவர முடிந்ததாக தரவுகள் வெளியாகிதாக வைத்திய நிபுணர் Dr.K.T..சுந்தரேசன் தெரிவித்தார்.













மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - Dr.எம் அச்சுதன்

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments