Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வு


இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்று உள்ளவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலையில் இரண்டு பேரும் மாலை 5 மணியளவில் 3 பேரும் இரவில் இரவில் 2 பேரும் என 7 பேர் தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 6வது பொதுமகன் இன்று காலை மரணமானார் 80 வயதான தொற்றாளியே அங்கொட தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

Post a Comment

0 Comments