Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 10 கொரோனா நோயாளர்களின் தொடர்பில் வெளியான அதிமுக்கிய தகவல்


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை உறுதி செய்யப்பட்ட 10 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்நதவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது..
குறித்த 10 பேரும் வைத்திய பரிசோதனையின் மூலமே கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் என உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பிலான எந்தவிதமான ஆரம்ப அறிகுறிகளும் தென்படவில்லை என்பது விசேட அம்சமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்களையும் தாம் சார்ந்த சூழலை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143 ஆகும். இதில் 17 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments