Home » » கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட பானம்! சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டம்

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட பானம்! சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டம்

வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
இதேவேளை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் வரை 143 கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கொவிட் 19 போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி் ஒருவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |