Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுக்கும் அவசர அறிவித்தல்

கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட மக்களுக்கான கோவிட்
19 விசேட சிகிச்சை நிலையம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று



சந்தேகிக்கும் நபர்கள் முதலில் 0766992261 என்கின்ற விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு முதற்கண் வைத்திய ஆலோசனையைப்

பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்களிடமிருந்து
சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசிக்கப்பட்டபின்னர் உங்களுக்கான பொருத்தமான சிகிச்சை முறை பற்றி உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.அதன் பிரகாரம் வீட்டுத்தனிமைப்படுத்தலில் உங்களை வைக்கவேண்டியசூழ்நிலை ஏற்படின் பொதுச்சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு ஆவனசெய்யப்படும்.

வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டியேற்படின்எவ்வாறு அனுமதிப்பது என்பது தொடர்பில் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.
நாங்கள் உங்களுக்காக விழித்திருக்கிறோம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள் நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் நாம் எல்லோரும் இணைந்து நமது நாட்டையே காப்போம்

நன்றி
கோவிட் 19 விசேட செயலணி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

Post a Comment

0 Comments