Home » » முற்றாக தடை செய்வதற்கு தீர்மானம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

முற்றாக தடை செய்வதற்கு தீர்மானம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையாக வினோத பயணங்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் பொது மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் 1 மீற்றர் இடைவெளியில் நபர்கள் நடமாடுமாறு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை அவசியம் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பஸ் மற்றும் ரயில் சேவைகளின் போது இதனை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சமூகத்தில் இடைவெளிகளை முன்னெடுப்பதற்காக பஸ் மற்றும் ரயில் பயணிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தின் போது பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை உரிய வகையில் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களுக்கு போதுமான அளவு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிப்பதற்கு விற்பனை நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தீர்மானிக்கப்படும்.
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்து (22) ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |