Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனித குலத்தின் எதிரி! கொரோனாவிற்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு


உலக நாடுகளின் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸிற்கு “மனித குலத்தின் எதிரி” என்ற கூடுதல் பெயரை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு கொரேனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து அதன் அபாயகர தன்மைக்கு அமைய COVID-19 Pandemic என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் மனித இனத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என குறிக்கும் வகையில் ‘"enemy against humanity" - (மனித குல எதிரி)’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments