Home » » வைரஸ் எதிர்ப்புக்கான இறுதியாகத் தயாரித்த சித்த மருந்து..! பல்கலைக்கழக தமிழ் மாணவன் !

வைரஸ் எதிர்ப்புக்கான இறுதியாகத் தயாரித்த சித்த மருந்து..! பல்கலைக்கழக தமிழ் மாணவன் !

வைரஸ் எதிர்ப்புக்கான இறுதியாகத் தயாரித்த சித்த மருந்து..!
==================================
வசந்தம் TV, ரூபவாகிணி TV,டான் TV, நேத்திரா TV, ITN TV செய்திப்பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க அதனைத் தயார் செய்யும் முறையை விளக்கும் போது
==================================
சித்த மருத்துவ ஆய்வுகளையும் ஒரு வருடத்திற்கு மேலாக மேற்க்கொண்டு வருகின்றேன். கடந்த வருடம் சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு நோயையும் குணப்படுத்தியுள்ளேன். தற்போது கொரோனா வைரஸிக்கெதிரான பல சித்த மருத்துவ ஆய்வுகளையும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கம்போடியா ஆகிய சித்த மருத்துவ ஆராய்ச்சிகளர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பித்தேன். அதன் விளைவாக நம் கண்முன் காணும் ஐந்து மூலிகைகள் மூலம் ஒரு வைரஸ் தடுப்பு குடிநீர் சித்த மருந்து ஒன்றை தயாரித்துள்ளேன்.
இதில் வைரஸ் காய்ச்சலின் போது இரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைகின்றது. அதனை தடுப்பதற்கு Green Chiretta என அழைக்கப்படும் நிலவேம்பும், தொண்டை நோவு, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு பில்லாந்தின் மற்றும் பொட்டாசியம் அதிகமுள்ள Gale of the wind என அழைக்கப்படும் கீழாநெல்லியும், இதனை சித்த மருத்துவத்தில் கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் அழைப்பார்கள். தலைவலி, உடல் சூடு, களைப்பு, வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவற்றை தடுப்பதற்கு Mollugo Cerviana என அழைக்கப்படும் பற்பாடகமும், சளி மற்றும் மார்பு எரிச்சலை தடுப்பதற்கு Mexican Mont என அழைக்கப்படும் கற்பூரவள்ளியும், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு Holy Basil என அழைக்கப்படும் துளசியும் பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளேன்.
குறிப்பிட்ட ஐந்து மூலிகையுமான நிலவேம்பு, கீழாநெல்லி, பற்பாடகம், கற்பூரவள்ளி மற்றும் துளசி ஆகியவற்றை ஒரு கைபிடி அளவு விகிதத்தில் எடுத்து 2 தொடக்கம் 3 லீற்றர் நீர் சேர்த்து, கொதித்தாறிய பின் அரை சிறிய டம்ளர் அளவு எடுத்து தேனுடன் சாப்பாட்டிற்கு முன் இரு 
வேளை  அருந்தவும்.
இதில் நிலவேம்பை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நிழலில் காய வைத்து பயன்படுத்துவது மேலும் சிறந்ததாக அமையும்.
மருந்துகளுடன் இதனை அருந்துவதனால் எந்த பாதிப்புமில்லை எனவும். மேலும் தான் வைரஸ் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சித்த மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளதாலும் தானும் ஆய்வுகளைச் செய்து வருவதாலும் மேலும் இது தொடர்பான நல்ல முன்னற்ற முடிவுகள் கிடைக்குமிடத்து அதனை விரைவாகவும் தெளிவாகவும் வெளிவிடுவதற்குத் தயாராகவுள்ளேன். மேலும் இக்காலத்தில் புரதச்சத்துக்களை அதிகம் கொண்ட தானியங்களை முளைக்கச் செய்து சமைத்து உண்ணுவதும், கசப்பான கீரை வகைகள் மூலிகைகளை உணவில் சேர்ப்பதும் சிறந்தாக அமையும். மேலதிக தொடர்புகளுக்கு 077 3867722 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
பிறருக்கு பயன்படும் என நினைத்தால் பகிருங்கள்..!
நன்றி..!
அன்புடன் சோ.வினோஜ்குமார்
இணைந்திருப்போம் வாழ்வின் இறுதி வரை..!
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |