Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகையே உலுக்கிய நிர்பயா பாலியல் கொலை சம்பவம்! குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்

இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
இவர்களுக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.
இன்றும் கூட குற்றவாளி பவன் குப்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்தது. அதன் பின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது.
அதிகாலை 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது.
இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகாலை 3.30 மணிக்கு தீர்ப்பை வழங்கியது. அதில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை. அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. தூக்கு தண்டனையை இன்றே நிறைவேற்றலாம் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

Post a Comment

0 Comments