உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகின் பல நாடுகளை கொரேனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்து வந்தாலும் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இத்தாலி தென்கொரியா போன்ற நாடுகளில் அதிக இறப்புகள் பதிவாகின்றது.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருவதுடன் அதனை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் முழு மூச்சுடன் செயற்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரஸிற்கான தடுப்பூசி வைரஸின் மேற்பரப்பு பிளவுபடும் புரதங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மனித உயிரணுக்களை ஆக்கிரமிக்கும் ஆற்றல் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி குறித்து அமெரிக்கா ஏற்கனவே பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதோடு, அவர்களின் நிபுணர்களின் குழு "கொரோனா" பரவல் ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசியை பாதுகாப்பாக வெளியிட 18 மாதங்கள் ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments