Home » » மட்டக்களப்பில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

மட்டக்களப்பில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

மட்டக்களப்பில் கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். குறித்த நபர் இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவரே கொரனா சந்தேகத்தில் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில் நேற்று சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட குறித்த நபர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் அவரது பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

தொடர்புபட்ட செய்தி ....


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவருக்கு கொரனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா பரவுவதை தடுக்கும் வகையிலா செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான செயலணியொன்றை அமைக்கும் வகையிலான அவசர கூட்டம் ஒன்று இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி உட்பட பொலிஸ்,இராணுவ அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,சுகதார பிரிவினர்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி,இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கொரணா அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் கொரணா தொற்க்கு இலக்காகாத காரணத்தினால் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலண்டனில் இருந்துவந்து மட்டக்களப்பு நகரில் இருந்துவந்த 61வயதுடைய ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்பான பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் கொரணாவினால் பீடிக்கப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும் தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் ஒருவர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தொடர்பான பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் கிராம மட்டத்தில் வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள்
தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துவம் வகையிலும் அவ்வாறானர்களை இனங்கண்டு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை செயலணி மேற்கொள்ளும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டடது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் செயலணியொன்றும் அமைக்கப்பட்டது.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |