Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சபை உறுப்பினர்கள்!

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேசத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளும் போது பிரதேச செயலகம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாகவும், பொது விழாக்கள், மகளிர் தினம் போன்றவற்றில் பிரதேச பெண் உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டுவருவதாகவும் கவலை தெரிவித்தனர்.
பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பராமரிப்பிற்காக பிரதேச சபைக்கு ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்படும் வீதி போன்ற அபிவிருத்தி பணிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments