Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் பலர் விடுதலை!

சிறு குற்றங்களை புரிந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி ஆர். டப்ளியு. டப்ளியு. யு. டி ஏ. சம்பாவோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தகவல் வெளியிடுகையில்,
சிறைச்சாலை ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் நீர்கொழம்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரஜீந்ரா ஜசூரியவின் உத்தரவுக்கமைய இந்த வாரத்தில் மொத்தமாக 170 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கைதிகள் விடுதலை செய்யபட்டுள்ளனர். பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள், பிணை வழங்கப்பட்டு பிணையில் செல்ல வசதியில்லாத கைதிகள், பிணை வழங்க தகுதியுள்ள கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அவர்கள் வசிக்கும் பிரதசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சிறைச்சாலை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
நாட்டிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பது ஜனாதிபதி, மற்றும் பிரதமரின் திட்டமாகும். இதன் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை 1600 வரை குறைந்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதற்கு இது வழிவகுக்கும் எனவும்; கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments