Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் முடங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விபரங்களை சேகரிக்க நடவடிக்கை

கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இவ்விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில்,
வெளிநாடுகளில் இருந்து கல்முனை பிராந்தியத்தில் முடங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தொடர்பாக விபரங்கள் சேகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த 61 பேரையும் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலதிக விடயங்கள் தொடர்பில் விசேடமாக கல்முனை மாநகர சபையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments