Home » » கொரோனா தொற்று-கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

கொரோனா தொற்று-கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கர்ப்பிணித்தாய்மாரின் எண்ணிக்கை குறைந்தளவாகக் காணப்பட்டாலும் அவர்கள் ஏனையவர்களை விட விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரிவினராகக் கருதப்படுவதாக விசேட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கர்பிணிப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் வைத்தியர் கபில ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கர்ப்பிணித் தாய்மார் விசேடமாக கவனிக்கப்பட வேண்டியோராகாக் காணப்படுகின்றனர்.

இலங்கையில் வருடமொன்றுக்கு சராசரியாக 360,000 பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். அவர்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 201,000 பெண்கள் வரையில் குழந்தை பிரசவிக்கின்றனர். எனவே அவர்களது ஆரோக்கியம் இந்த சந்தர்ப்பத்தில் விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

கொரோனா வைரஸ் கர்பிணித்தாய்மாரை எவ்வாறான சந்தர்ப்பங்களில் தாக்கும் என்பது பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலினால் 81,000 பேர் வரையில் உயிரிழந்துள்ள போதிலும் ,கர்ப்பிணிப் பெண்களில் 200 க்கும் குறைந்தளவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவர்களில் 38 பேர் வரையில் பாரதூரமான பாதிப்பபுக்கள் இன்றி தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். ஏனையோரில் எவரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணித்தாய்மாரின் வயிற்றிலுள்ள சிசுவுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வைரஸ் தொற்றுக்குள்ளான 147 கர்ப்பிணித்தாய்மாரில் எவரும் அவதான மட்டத்தில் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 64 கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 82 பேர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களின் உடல் வெப்பநிலை 8 வீதமாகவே காணப்பட்டது.

ஏவ்வாறிருப்பினும் கர்ப்பிணித் தாய்மார் ஏனையவர்களை விடவும் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார் முடிந்தளவு வீட்டிலேயே இருப்பதே சிறந்ததாகும் என்றார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |