Home » » பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

நாடு முழுவதும் 60 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையை அம்பாறை நகரப்பகுதி கல்முனை மாநகர பகுதி பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு மணல்சேனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் மாவடிப்பள்ளி சம்மாந்துறை மல்வத்தை உள்ளிட்ட பகுதிகள் நேற்று முதல் இன்று அதிகாலை வரை வெறிச்சோடிக்காணப்பட்டன.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து சில இடங்களில் முழுமையாக சன நடமாட்டமின்றி அதிகாலை வேளை வெறிச்சோடி காணப்பட்டது.
அத்துடன் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் பூட்டப்படாத சில கடைகள் பொலிஸாரால் எச்சரிக்கை செய்யப்பட்டு பூட்டப்பட்டன.
இதன் போது பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி விசேட வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.











Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |