இன்று மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போது நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. நாளை ஊரடங்கு தளர்த்தப்படும்போது மக்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு இருக்கின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை பல பகுதிகளாக பிரித்து வேறுவேறு இடங்களில் நடாத்துவதன் ஊடாக பொதுமக்கள் கூடுவதற்கான சந்தர்ப்பத்தினை குறைக்கமுடியும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் வீதியோர வியாபாரங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக தடைவிதிக்கப்படுகின்றது.
இதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா தொற்றுக்களை தடுக்கும் வகையில் இருக்கும் என நினைக்கின்றேன்.
பொதுமக்கள் இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். எங்களது அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் செயற்படும்போது மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம்இ கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள பஸ் தரிப்பு நிலையங்கள், பொதுச்சந்தை கட்டிடத்தொகுதி போன்ற பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.





0 Comments