Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் வீதியில் வந்தவர்களை துரத்திப் பிடிக்கும் பொலிசார்


நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர்.
இவர்கள், இன்று காலை 8.10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிஸார் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஊரடங்கு வேளையில் வீதிகளில் பயணித்த 3 பேரை பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு என பார்ப்பதற்காக வீதிக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.





Post a Comment

0 Comments