Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிண்ணியா, மூதூர் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டனர் !!



அபு ஹின்சா

திருகோணமலை மாவட்ட கிண்ணியா, மூதூர் பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார்கள்.

தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் அல்ஹாஜ் நூருள் ஹுதா உமர் அவர்களின் இல்லத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்குமிடைய நடைபெற்ற கலந்துரையாடலில், 

கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா, மூதூர் பிரதேச மக்கள் பிழையான முறையில் வழிநடத்தப்பட்ட வரலாறுகளையும், எமது நாட்டு முஸ்லிங்களுக்கு சரியான முறையில் வாழிநடத்த முடியாமல் முஸ்லிம் தலைவர்கள் திணறுவதையும் பற்றி ஆழமாக பேசியதுடன் தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று முஸ்லிங்கள் மத்தியில் சரியான தலைமையை அடையாளப்படுத்த பாடுபட்டு உழைக்கப்போவதாகவும் உறுதியளித்தனர். 

பின்னர் தேசிய காங்கிரசின் தலைமையை பலப்படுத்த நாட்டு மக்கள் சகலரதும் நன்மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் ஏ.எல். எம். அதாஉல்லா அவர்களின் கரங்களை பற்றி தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, தேசிய காங்கிரஸ் பிரதி தலைவர் வைத்தியர் ஏ. உதுமாலெப்பை,  தேசிய காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் வைத்தியர். வை.எஸ்.எம். சியா, கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments