Home » » கிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா ?

கிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா ?




கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளார் என்று ,சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கு கடந்த இரண்டு வாரங்கள் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட இவரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்தார். இருந்த போதிலும் இவர்  கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று  சுமார் 50 ற்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடர்புகளை  வைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் கஷ்டங்கள் இருப்பதை உணர்ந்த அவர் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அங்கு அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

குறித்த நபர் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெறமுற்பட்ட போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

அவரை ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு தனியார் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அவர் அவ்வாறு செய்யாமல் கடந்த திங்கட்கிழமை வரை பரவலாகப் பயணம் செய்து பலருடனும்  தொடர்புகளை கொண்டிருந்துள்ளார். இதன்  மூலம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்  உறுதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அமைச்சர் வன்னியராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐ.டி.எச் – அங்கோiட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும்  இவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |