Home » » கொரோனா தொடர்பில் அமெரிக்காவை உதாரணம் காட்டி ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொரோனா தொடர்பில் அமெரிக்காவை உதாரணம் காட்டி ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இடைவெளியுடனான சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாத பட்சத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.
குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா போன்ற நாடுகளை அதிகளவு பாதித்துள்ளது.
ஸ்ரீலங்காவிலும் தற்போதுவரை 106 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதேவேளை ஏனையோருடன் இடைவெளியுடனான சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாத பட்சத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதி என்பதோடு, இந்த காலத்திற்குள் மக்கள் அதிக இடைவெளியை கடைபிடித்தல் இன்றியமையாத ஒன்றாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் குறித்த சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமையினாலேயே 85 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |