Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு பற்றி தீர்மானம் எடுப்பதாயின் நாங்கள் என்னத்துக்கு?


யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து மட்டக்களப்பு சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுப்பதென்றால் நாங்கள் ஏன் இங்கு தமிழரசுக்கட்சி என்று இருப்பான் என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா மட்டக்களப்பில் வைத்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த தமிழரசு வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மட்டக்களப்புக்கு கடந்த புதன்கிழமை மாவை சேனாதிராஜா விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு மட்டுமாவட்ட தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களையும் கட்சியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடிய வேளையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் வேட்பாளர் தெரிவு தங்களைமீறி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் செல்வராசா சுட்டிக்காட்டியிருந்தார்.பட்டிருப்பு தொகுதியில் தமிழர் அல்லாத ஒருவரை பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஏதோ செல்வாக்கின் அடிப்படையில் வேட்பாளர் நியமனம் யாழ்பாணத்தில் இருந்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்பு மாவை தனக்கு நெருக்கமானவர்களிடம் செல்வராசா இப்படியொரு வினாவை தொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லையெனவும் தனக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
<

Post a Comment

0 Comments