Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரனா சிகிச்சை நிலையமாக மட்டு.போதனா வைத்தியசாலை –எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கொரனா வைரஸ் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநாட்டவர்களை சோதனைகளுக்காக மட்டக்களப்புக்கு கொண்டுவருவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் இருந்து :பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்றதுடன் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரனா பரிசோதனை மட்டக்களப்பில் வேண்டாம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,இளைஞர் கழக உறுப்பினர்கள்,இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
முட்டக்களப்பு மாவட்டமானது கடந்த காலத்தில் பல அழிவுகளை எதிர்கொண்ட மாவட்டமாகவுள்ள நிலையில் மீண்டும் இங்கு அழிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதனை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் வைத்தியசாலையினை முற்றுகையிட்;டுபோராட்டம் நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினர்.









Post a Comment

0 Comments