Advertisement

Responsive Advertisement

7 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்கிய சங்ககார மற்றும் மஹேல


தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார மற்றும் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோர் இணைத்து 7 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மிகவும் கஷ்டமாக இந்த காலப் பகுதியில் வடக்கு பிரதேசத்தில் மாத்திரமல்லாது கேகாலை, ருக்மல்கம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 7 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவர்களின் உதவியுடன் தேவை உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக உணவு பொருட்கள் அடங்கிய 5 ஆயிரம் பொதிகள் வழங்கப்பட்டதுடன் இதன் பின்னர் மேலும் 2 ஆயிரம் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார , பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனது வீட்டில் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.
தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த உதவிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் திமுத் கருணாரத்ன உட்பட கிரிக்கெட் அணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை வைத்தியசாலைகளுக்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர்.

Post a Comment

0 Comments