இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அண்மையில் அக்குரண பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து வந்தவர் அவர். பின்னர் அவரது தந்தை சகோதரி ஆகியோர் தொற்றிற்கு இலக்காகியிருந்தனர்.
ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்தனர். இதில் இன்னும் 3 குடும்ப உறுப்பினர்கள் கொரொனா தொற்றிற்கு இலக்காகியிருப்பது இன்று உறுதியானது. இவர்களிற்கு முன்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லையென குறிப்பிடப்பட்ட நிலையில், இன்று மீளவும் நடந்த பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது உறுதியானது.
இதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அக்குரன பகுதிக்குள் யாரும் நுழையவோ, வெளியேறவோ முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments