Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

60 வயதுக்கும் மேற்பட்டோர் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்


60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அதிக வாய்ப்பு உள்ளதால், அந்த ஆபத்து தொடர்ந்தும் உச்ச மட்டத்தில் இருப்பதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் 60க்கும் மேற்பட்ட நபர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொரோனா காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த நபர் 60 வயதானவர் எனவும் அவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களால் அவதிப்படும் வயோதிபர்கள்,புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்தும் நபர்களுக்கு கொரோனா தொற்றினால், நிலைமை பாரதூரமான இருக்கும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த காலப் பகுதியில் 60வயது மேற்பட்டோர் வீடுகளில் தங்கியிருக்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸின் தற்போதைய கேந்திர நிலையமாக மாறியுள்ள அமெரிக்காவில் ஏற்பட்ட மரணங்களில் இறந்தவர்களில் 10 இல் 8 மரணங்கள் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

அதேவேளை சிறுவர்கள் மற்றும் நடுத்தர வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு சம்பந்தமாக மருத்துவர் பத்மா குணரத்ன தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த வைரஸ் சிறுவர்களுக்கு இருமலும் வந்து குறைந்து செல்ல முடியும். மிகவும் அபூர்வமாகவே சிறுவர்களுக்கு இந்த வைரஸ் கடுமையானதாக இருக்கும்.
நடுத்தர வயதினருக்கு இந்த வைரஸ் தொற்றினால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைய முடியும் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments