அமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 Comments