( அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்  நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 150 பயனாளிகளுக்கு புதிய குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி மத்திய குழு தலைவர் மஹ்ரூப் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு அம் மக்களுக்கான குடிநீர் இணைப்பினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஸீ.எம்.முபீத் மற்றும் சித்திக் நதீர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஸ்ஷர்ரப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்), முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வை.கே. ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


 
 
0 Comments