Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இத்தாலிக்கு பயணமான கியூபாவின் சக்தி வாய்ந்த மருத்துவக் குழு (காணொளி)


கொவிட்-15 வைரஸ் தாக்கத்திற்கு அதிகமாக பாதிப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.

குறித்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரையில் அங்கு 5 ஆயிரத்து 476 பேர் பலியாகியுள்ளதோடு 59 ஆயிரத்து 138 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள் இத்தாலியின் சுகாதார சேவைகளுக்கு உதவி வழங்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 52 பேர் கொண்ட பலமான கியூபா மருத்துவக் குழு சமீபத்தில் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இத்தாலிக்கு சென்ற குறித்த வைத்திய குழுவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வலம் வருகிறது.






Post a Comment

0 Comments