Advertisement

Responsive Advertisement

”ஸஹிரியன் பிரிமியர் லீக் ” ZPL Session II -2020 கிரிக்கட்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி  பழைய மாணவ நண்பர்கள் ஒன்றியத்தினால் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள கல்லூரியின் பழைய மாணவர் அணிகள் பங்கேற்கவுள்ள  ”ஸஹிரியன் பிரிமியர் லீக் ”  ZPL Session II -2020 கிரிக்கட்  சமருக்கு  பிரதான அனுசரனையினை   மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

இத்தொடர் சம்பந்தமான கலந்துரையாடலொன்று கல்முனை ஸாஹிரா பழைய மாணவ நண்பர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகரும் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வருமான கலாநிதி ஸிராஸ் மீராஸாஹிப் .அவர்களுக்கும் இடையில் அன்னாரின் சாய்ந்தமருது  இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.
    ”ஸஹிரியன் பிரிமியர் லீக் ”  கிறிக்கட் சுற்றுப் போட்டி அடுத்த மாதம் முதல் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருப்பதோடு 25 இற்கும் மேற்பட்ட இலங்கையின் பலபாகங்களிலும் மற்றும் கடல்கடந்து வாழும் பழைய மாணவர் குழுக்கள் கலந்து  கொள்ள இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments