Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது கடற்கரைப்பிரதேசத்தை அழகாகவும் சுத்தமாகவும் பேணல்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது கடற்கரைப்பிரதேசத்தை அழகாகவும் சுத்தமாகவும் பேணுவதன் மூலம் பொதுமக்கள் விரும்பும் சுற்றாடலாக பேண முடியும் என்பதற்கிணங்க சாய்ந்தமருது கடற்கரை வீதி முகத்துவாரத்துக்கு தென்புறமாக பற்றைக் காடாகவும் குப்பை கூழங்கள் நிறைந்த இடமாகவும்  காணப்பட்ட இடமானது, கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது 20 ம் வட்டார உறுப்பினர் எம். வை. எம். ஜஃபர் அவர்களது வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் எம். சி. அன்சார் மற்றும் பொது வசதிகள் மேலாளர் முஹம்மட் அஹ்ஸன் ஆகியோரது ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யப்பட்டது  .

சாய்ந்தமருது முகத்துவாரப் பிரதேசத்தில் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஏற்பாட்டில்  கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் பொழுது போக்கும்  பகுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன் மரங்களும் நாட்டப்பட்டு தினசரி முகாமைத்துவமும் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன்  சாய்ந்தமருது  வைத்தியசாலை வீதியிலுள்ள தோணாவின் மேலாக செல்லும் பாலத்தின் இருகிலுள்ள சுற்றுவட்டத்தில் நிழல்தரும் மரங்களும் நாட்டப்பட்டன.

Post a Comment

0 Comments