Advertisement

Responsive Advertisement

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் (1996 - 2001) வரையான காலத்தில் கல்வி கற்றவர்களால் ரீசேட் அறிமுகம்

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில்  (1996 - 2001) வரையான காலத்தில் 2001 க.பொ.த  சாதாரண   தரத்தில் 11  E வகுப்பில்  கல்வி கற்ற  மாணவர்கள்  19 ஆண்டுகளுக்கு பிற்பாடு  ஒன்றிணையும் உன்னத நிகழ்வும் ரீ  சேட்  அறிமுக நிகழ்வும் முஸ்தபா முபாறக் தலைமையில் அண்மையில்  நிந்தவூர் EFC ஹோட்டலில் நடைபெற்றது.



இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக  1997-2001 (தரம் - 07 முதல் தரம் 11  ) வரையான காலப்பகுதியில் தொடர்சியாக இம்மாணவர்களுக்கு கற்பித்த தமிழ் பாட ஆசிரியரும் வகுப்பாசிரியருமான எம்.எச். ஜாபிர்  ,  சமூகக்கல்வி பாட ஆசிரியர் ஏ. எம்.இப்றாஹிம்  மற்றும் தரம் 11E வகுப்பு கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி அன்பு நண்பர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு அதிதிகளான அன்பு ஆசான்களுக்கு  அவர்களின் ஆசிரிய  சேவையை பாராட்டி நினைவு பரிசில்களும்  வழங்கி  வைக்கப்பட்டன..

Post a Comment

0 Comments