கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் அராஜகத்தால் அண்மைகாலங்களாக விசேட தர தாதிய உத்தியோகத்தர் ஆர்.தேவாமிர்ததேவி உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை கல்முனை சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பித்த கல்முனை பெண்களின் உரிமை அமைப்பினர் பேரணியாக கிட்டங்கி கல்முனை வீதியின் ஊடாக சென்று இறுதியாக கல்முனை மனித உரிமை பிராந்திய காரியாலயத்தை வந்தடைந்தனர்.
இதன்போது அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
இதன் பின்னர் இலங்கை மனித உரிமை கல்முனைப் பிராந்திய ஆணைக்குழுவிடம் கல்முனை பெண்களின் உரிமை அமைப்பால் மகஜரொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஆர்.தேவாமிர்ததேவியும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீபையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன்போது கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதியும், கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும், கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையிலான குழு மகஜரை கையளித்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்,
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தருக்கு உரிய பாதுகாப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விசேட தர தாதிய உத்தியோகத்தரை மிரட்டும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் அநாகரிக செயற்பாடு தொடரும் பட்சத்தில் பல்வேறு வடிவில் போராட்டம் இடம்பெறும் என கூறியுள்ளார்.






0 comments: