( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியினை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் வீதி ஓட்ட நிகழ்வு ( அரை மரதன் ) அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப் போட்டிக்கு கல்லூரியின் பழைய மாணவரும் பாடசாலைகள் கட்டிட பொறியியலாளருமான ஏ.ஜே.எம்.ஜவ்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் ,கல்லூரின் விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் , பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வீதி ஓட்ட நிகழ்வில் அரபா இல்லத்தைச் சேர்ந்த எம்.ரஸா முஹம்மட் முதலாவது இடத்தையும் , ஹிரா இல்லத்தைச் சேர்ந்த எம்.ரீ.எம்.ரஜா இரண்டாம் இடத்தையும் சபா இல்லத்தைச் சேர்ந்த என்.சாபித் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் , மேற்படி தூரத்தை இறுதிவரை ஓடி முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான இவ்வீதியோட்டம் ஸாஹிராக்கல்லூரி வீதி , கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய முன்றலை சென்றடைந்து மீண்டும் மட்டக்களப்பு - கல்முனை வீதி வழியாக கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவரை சென்று மீண்டும் பிரதான வீதி , ஸாஹிராக் கல்லூரி வீதி வழியாக கல்லூரி மைதானத்தை வந்தடைந்தது.
சாஹிரா கல்லூரி விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்
நூருல் ஹுதா உமர்.
கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள்
(11) இன்று பிற்பகல் வெகு விமர்சையாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் வேண்ட் இசைக் குழுவினரின் இசையோடு அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதம், பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது வைபக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். மேலும் பிரதேச அரச காரியால பிரதானிகள், கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலை பிரதி அதிபரும், விளையாட்டுச் சபை தவிசாளருமான எம்.எச்.எம்.அபூவக்கர், சிரேஷ்ட விளையாட்டு ஆசிரியரும் விளையாட்டுச் சபை செயலாளருமான அலியார் பைசர், பாடசாலை விளையாட்டுப் பொறுப்பதிகாரியும் போட்டிகளின் பணிப்பாளருமான கே.எம்.தமீம், பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.ஐ.எம். முஸ்தாக், ஈ-ஸாஹிரா மற்றும் பாடசாலை ஊடக பொறுப்பதிகாரி சஃபி எச்.இஸ்மாயில் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்ட்துடன் மாணவர்களின் அணி வகுப்பு, உடற் கண்காட்சி என்பன இடம்பெற்றது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
0 Comments