( அஸ்ஹர் இப்றாஹிம் )
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பெரு விளையாட்டுக்களுள் ஒன்றான எல்லே போட்டியில் 2020 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக அரபா இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மைதானத்தின் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி சுற்றுப் போட்டியில் மர்வா இல்லத்தை இறுதிப் போட்டியில் சந்தித்த அரபா இல்லம் 1 - 0 என்ற ஓட்ட வித்தியாசத்தில் மர்வா இல்லத்தை வெற்றி கொண்டது.
அரை இறுதிப் போட்டியில் ஹிரா இல்லத்தை எதிர் கொண்ட அரபா இல்லம் 4 - 3 என்ற ஓட்ட வித்தியாசத்திலும் சபா இல்லத்தை எதிர்கொண்ட மர்வா இல்லம் 6 - 3 என்ற ஓட்ட வித்தியாசத்திலும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப் போட்டிக்கு கல்லூரியின் பழைய மாணவரும் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.மலீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்லூரிய்ன் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , உதவி அதிபர் எம்.அபுபக்கர் மற்றும் கல்லூரின் விளையாட்டுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம நடுவராக உடற்கல்வித்துறை ஆசிரியர் ஏ.சியாம் அவர்களும் அவருக்கு உதவியாக விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றஸீன் ,உடற்கல்வித்துறை ஆசிரியர் ஏ.எம்.றியாஸ் , உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம்.றியால் ஆகியோரும் பங்கேற்றிருநதனர்.
0 comments: