Advertisement

Responsive Advertisement

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


2019.01.01ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள வேலை வாய்ப்பற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி செயலகம் வேலைதொடர்பில் அறிவித்துள்ளது.
“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், குறித்த விண்ணப்பதாரிகள் ஒரு வருடத்திற்கு அதிக காலம் தொழில் வாய்ப்பற்றவராக இருப்பதாகவும் விண்ணப்பிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர பதிவைக் கொண்டவராகவும் இருப்பதை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ள பட்டப் பாடநெறி ஒன்றை அல்லது அதற்கு சமமான தகைமையினைக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றை 2019.12.31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்துள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
2019.01.01ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ள குறித்த காலப்பகுதியில் (பட்டம் பெற்ற திகதி முதல்) வேலை வாய்ப்பற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்” என்று ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில் தேடும் பட்டதாரிகள் அரசாங்க தொழில்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்ப இறுதி திகதி பெப்ரவரி 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த திகதி பெப்ரவரி 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
45 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதியை கொண்டவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
விண்ணப்பங்களை presidentoffice.gov.lk என்ற இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments